வதந்திகளை நம்பாதீர்கள்….அஜித் பட நடிகை வருத்தம்

Sinoj| Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (22:46 IST)


தமிழில் அங்காடித்தெரு,கற்றது தமிழ்,
மங்காத்தா உளிட்ட படங்களில் நடித்தவர் அஞ்சலி.இவர் வதந்திகளை நம்பாதீர்கள் என கூறியுள்ளார்.


அங்காடித் தெரு படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஞ்சலி/. அதன்பின், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை,இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என பல படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.

தர்போது தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அஞ்சலுக்கு கொரோனா பாதிப்பு என சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள அவர், யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்… நான் நலமுடன் சந்தோஷமாக இருக்கிறேன்….அது முற்றிலும் பொய்யான செய்தி எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :