பாகுபலி பட முக்கிய பிரபலத்திற்கு கொரோனா ! ரசிகர்கள் அதிர்ச்சி

vijayendar
Sinoj| Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (22:48 IST)


தெலுங்கு சினிமாவில் சீனியர் இயக்குநர் விஜயேந்திர பிரசாத். இவர் இயக்குநர் ராஜமௌலியின் தந்தை. இவர் அர்த்தங்கி, ஸ்ரீ கிருஷ்ணா, ஸ்ரீவள்ளி உள்ளிட்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் பல வெற்றிப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவரது மகன் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி1,2 படத்திற்கும் இவர்தான் கதை எழுதினார்.

மேலும், தலைவி, மற்றும் மணிகர்னிகாவுக்கும் இவர்தான் கதை எழுதினார். தற்போது 70 வயதைத்தாண்டியுள்ள இவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :