படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு விபத்து…

Sinoj| Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (22:45 IST)


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை ஒருவருக்கு படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருபவர் நடிகை சனா. இவர் ராஜபாட்டை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட மொழிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் சின்னத்திரை தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இன்று படப்பிடிப்புத்தளத்தில் சனா கீழே விழுந்தார். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர் அவரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.இதில் மேலும் படிக்கவும் :