’’மாஸ்டர் ’’ பட நடிகருக்கு கார் பரிசளித்த லோகேஷ் கனகராஜ்
சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீசான படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். நடிகர் விஜய் மற்று விஜய்சேதுபதி நடித்தனர்.இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் வாரிக் குவித்தது.
இப்படத்தில் விஜய்க்கு வில்லாக நடித்த நடிகர் விஜய்சேதுபதியின் இளம்வயது தோற்றத்தில் நடித்தவர் மகேந்திரன். இவரது நடிப்புத்திறன் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் மகேந்திரனுக்கு இன்று லோகேஷ் கனகராஜ் ஒருகாரை பரிசளித்தார்.
இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் இதுகுறீத்து மாஸ்டர் மகேந்திரன் கூறியதாவது: புதியவருடம், புதிய வாழ்க்கை, எல்லாம் மாஸ்டர் படத்தால் மட்டும்தான் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் காரைப் பரிசளித்த லோகேஷ் அண்ணாவுக்கு நண்றி எனத் தெரிவித்துள்ளார்.