கல்லூரிகள் திறப்பு …..வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு !
கொரோனா பெருந்தொற்றுக் காரணமக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் வழி பாடம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரும் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் உயர் கல்வி நிறுவனங்களைத் திறப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
அதில், கல்லூரிகள் வாரத்திற்கு நாட்கள் செயல்படும். அங்குள்ள நீச்சல் குளங்கள் மூட வேண்டும்.
கொரோனா தொற்று இருந்தால் கல்லூரியில் மாணவர்களுக்கு அனுமதியில்லை. மாணவர் விடுதியில் ஒருஅறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும் எனவும், மாணவர்கள் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள உறவினர் வீடுகளில் தங்குவது சிறந்தது எனக் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தவும் அரசு உறுதியளித்துள்ளது. கல்லூரியில் மாணவர்கள் சுற்றுலா செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.