திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (09:09 IST)

அடுத்த 3 மாதங்களுக்கு அடக்கி வாசிக்கனும்... மத்திய அரசு நெறிமுறைகள்!

அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகை காலம் என்பதால் பண்டிகைகளை எப்படி கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 
 
1. பண்டிகை கொண்டாட்டங்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மட்டும் அனுமதிக்கப்படும். 
 
2. கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளுக்குள் மட்டுமே கொண்டாட்டங்களை வைத்துக்கொள்ள வேண்டும். 
 
3. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நாள்பட்ட வியாதிகள் உடையவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே தங்க வேண்டும். 
 
4. பண்டிகை காலத்தில் பதிவு செய்யப்பட்ட பக்தி இசையும், பாடல்களும் இசைக்கப்படலாம். பாடகர்கள்/ பாடகர் குழுக்களுக்கு அனுமதி இல்லை.
 
5. முக கவசம், முக ஷீல்டு அவசியம். பொது இடத்தில் ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியை பராமரிக்க வேண்டும். 
 
6. பேரணிகள், ஊர்வலங்கள், சிலை கரைப்பு போன்றவற்றில் மக்கள் பங்கேற்பதில், நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கை வரம்பினை மீறக்கூடாது
 
7. நீண்ட தூரங்களுக்கு பேரணி, ஊர்வலம் நடத்துகிறபோது, ஆம்புலன்ஸ் சேவை உடன் இருக்க வேண்டும்.
 
8. நாள் கணக்கில், வாரக்கணக்கில் நீடிக்கும் நிகழ்வுகள், பந்தல்கள், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை கொண்டே நடத்த வேண்டும்.
 
9. பந்தல்கள், உணவு பரிமாறும் கூடங்கள் போன்றவற்றில் இருக்கைகள் தனிமனித இடைவெளியை பின்பற்றி அமைக்க வேண்டும். 
 
10. கடைகள், ஸ்டால்கள், சிற்றுண்டி கூடங்கள் ஆகியவற்றில் எல்லா நேரங்களிலும் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
 
11. சமூக சமையலறைகள், அன்னதான நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் தனிமனித இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
 
12. நாடக மற்றும் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள், மேடை கலைஞர்களுக்கும் பொருந்தும்.
 
13. யாரும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர் என கண்டறியப்பட்டால், அந்த வளாகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
 
14. யாரும் எச்சில் துப்பக்கூடாது.
 
15. அனைத்து கொண்டாட்ட நிகழ்வுகளிலும் சுகாதார அவசர நிலைகளுக்கு செல்வதற்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.