செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (10:35 IST)

திரையரங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு!

நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதித்த நிலையில் இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தற்போது பார்ப்போம்
 
 
1. திரையரங்கத்திற்கு வெளியேயும்‌, பொது இடங்களிலும்‌, காத்திருப்பு அறைகளிலும்‌
எப்பொழுதும்‌ ஒருவொருக்கும்‌ மற்றவருக்கும்‌ இடையே குறைந்தபட்சம்‌ 6 அடி
இடைவெளியை பின்பற்ற வேண்டும்‌.
 
2. திரையரங்கு வளாகத்தின்‌ பொது இடங்கள்‌, திரையரங்கின்‌ நுழைவாயில்‌ மற்றும்‌ வெளியேறும்‌ வழி ஆகிய இடங்களில்‌, கைகளால்‌ தொடாமல்‌ பயன்படுத்தக்‌கூடிய கை சுத்திகரிப்பான்‌ வழங்கும்‌ இயந்திரங்கள்‌ நிறுவப்பட வேண்டும்‌.
 
பொது மக்கள்‌ சுவாசம்‌ சார்ந்த நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்‌. இருமல்‌ மற்றும்‌ தும்மலின்‌ போது, வாய்‌ மற்றும்‌ மூக்கை, திசு பேப்பர்‌ கைக்குட்டை! முழங்கை கொண்டு கட்டாயம்‌ மூடுவதோடு, அச்சமயங்களில்‌ உபயோகப்‌படுத்தப்பட்ட திசு பேப்பர்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்‌.
 
அனைவரும்‌ தங்களது உடல்நலத்தை ண்காணிப்பதோடு மட்டுமல்‌ல தங்களுக்கு ஏதேனும்‌ உடல்நலக்‌ குறைபாடு ஏற்படின்‌ அது தொடர்பாக உடனடியாக மாநில மற்றும்‌ மாவட்ட உதவி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்‌. பொது இடங்களில்‌ எச்சில்‌ துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்‌.
அறிவுறுத்தப்படுகிறது.
 
திரையரங்கு வளாகத்தில்‌, ஒரு நபருக்கு காய்ச்சல்‌ / இருமல்‌ / தொண்டை புண்‌ உள்ளிட்ட அறிகுறிகள்‌ இருந்தால்‌, தொடர்புடைய திரையாங்கு நிர்வாகம்‌, கீழ்க்கண்ட நடைமுறைகளைப்‌ பின்பற்ற வேண்டும்‌:
 
* நோயுற்ற நபரை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தும்‌ வண்ணம்‌ ஒரு தனி அறை அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில்‌ தங்க வைக்க வேண்டும்‌.
 
* பாதிக்கப்பட்ட நபரை மருத்துவர்‌ பரிசோதிக்கும்‌ வரை அவருக்கு முகக்கவசம்‌ வழங்க வேண்டும்‌.
 
* உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனை அல்லது மாநில / மாவட்ட உதவி எண்ணைத்‌ தொடர்பு கொண்டு தகவல்‌ தெரிவிக்க வேண்டும்‌.