திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:15 IST)

டாஸ்மாக்கை மூடிவிட்டு தியேட்டரை திறக்கனும் – பிரபல நடிகர் எச்சரிக்கை

இந்தியாவில் 31 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் 4 லட்சம் பாதிப்பைத் தொடப் போகிறது.

இந்நிலையில் மத்திய அரசு சமீபத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால் தமிழக அரசு இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் பலரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக்கை மூடிவிட்டு தியேட்டரை திறக்க வேண்டும் என  நடிகர் மன்சூர் அலிகான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஒடிடி தளத்தில் வெளியாவது குறித்துப் பேசிய அவர்,  பெரிய படங்களை மட்டும் அதில் வெளியிடுகிறார்க> சின்னப் படங்களும் தயாராக உள்ளது அதையும் வாங்கி வெளியிட வேண்டும் இல்லையெனில் ஒடிடியே வேண்டாம் சினிமாத்துறையினர் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.