வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூன் 2020 (08:52 IST)

அரசு அலுவலகங்களில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை ! எதற்கு தெரியுமா?

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின் இயங்க ஆரம்பித்துள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பேரிடரை முன்னிட்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு அலுவலகங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன. இதனை அடுத்து அங்கு தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக தலைமைச் செயலாளர் கே சண்முகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘பொது முடக்க காலத்தில் அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தொடா்பாக மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமையன்று அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும். அன்றைய தினமும், மறு நாளான ஞாயிற்றுக்கிழமையன்றும் அரசு அலுவலகங்களின் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும். அன்றைய தினமும், மறு நாளான ஞாயிற்றுக்கிழமையன்றும் அரசு அலுவலகங்களின் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும். இந்தப் பணிகள் மறுஉத்தரவு வரும் வரை தீவிரமாக தொடா்ந்து மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.