வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (14:10 IST)

ரஜினிக்கு 100 கோடி சம்பளம் கொடுக்க தயாராக உள்ளனர் – பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக் !

சூப்பர் நடிகர் தனது நம்பர் 1 இடத்தை இழக்கவில்லை என்றும் அவருக்கு 100 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளதாகவும் பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக அவருடைய படங்களை விட அஜித், விஜய்யின் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூல் செய்வதாக ஒரு  ஒரு தகவல் பரவி வருகிறது. உதாரணமாக பேட்டயோடு மோதிய விஸ்வாசம் அதிக வசூலை செய்தது.இதுபோல விஜய்யின் மெர்சல், பிகில், சர்கார் போன்ற படங்களும் ரஜினி படத்தை விட அதிகமாக வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ரஜினி நம்பர் 1 இடத்தை இழந்துவிட்டார் என்ற கருத்துகளும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது சினிமா டாக்கிஸ் என்ற யுட்யூப் சேனலில் இதுபற்றி பேசுகையில் ‘ரஜினிக்கு சம்பளமாக இன்றும் ரூ.100 கோடி தர தயாரிப்பாளர்கள் தயாராகவுள்ளனர், அப்படியிருக்க நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள் யார் நம்பர் 1 என்று' எனக் கூறியுள்ளார்.