1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 மே 2019 (08:02 IST)

இப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே! சேரன் புலம்பல்

இயக்குனர் சேரன் இயக்கி நடித்த 'திருமணம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து அனைத்து ஊடகங்களின் பாராட்டுக்களை பெற்றது. ஒரு திருமணத்தில் தேவையில்லாத செலவுகள் செய்து கடனாளியாகி வாழ்க்கையில் கஷ்டப்படுவதை விட திருமணத்தை எளிதாக நடத்தி வாழ்க்கையை சந்தோஷமாக வாழலாம் என்பதை சேரன் தனது பாணியில் மிக அருமையாக சொல்லியிருந்தார்.
 
இந்த படம் ஊடகங்களின் நல்ல வரவேற்பை பெற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. பழைய மாடலில் திரைக்கதை, ஸ்டார் வேல்யூ இல்லாதது, சுமாரான புரமோஷன் ஆகிய காரணங்களால் இந்த படத்தின் வசூல் சுமாராகவே இருந்தது
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஆங்கில விமர்சனம் ஒன்றில் சேரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாராட்டு குறித்து இயக்குனர் சேரன் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்தபோது, 'பாராட்டுக்கள் சரி.. ஆனால் பொருளாதார ரீதியாக வெற்றி பெறவில்லையே  இங்கே முதல் வாரம் ரசிகர்கள் வந்தால்தான் படம் எடுத்தவர்களுக்கு லாபம். ஆனால் கமர்சியல் நடிகர்களின் படங்களுக்கு முதல் ஷோ குவியும் மக்கள் நல்ல படங்களுக்கு வருவதில்லை. பின்னர் எப்படி நாங்கள் நல்ல படங்கள் தொடர்ந்து எடுப்பது என்று ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.