ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 10 மே 2019 (16:19 IST)

திருமண தேதியை அறிவித்த விஷால்...!!

நடிகர் விஷால் - ஆந்திர தொழிலதிபர் மகள் அனிஷா திருமணம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். தமிழ் சினிமாவில் பல ஆக்க்ஷன் படங்களில் நடித்து அதிரடி நாயகனாக வலம் வந்தார். 
 
விஷாலின் அயோக்யா திரைப்படம் இன்று வெளியாகும் என்று விஷாலின் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் படம் இன்று வெளியாகததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி தெரிவித்துள்ளார் விஷால். 
 
ஆம், ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணனை விஷால் காதலித்து வருவதாக செய்தி முதலில் வெளியானது. பின்னர் மார்ச் மாதம் ஐதராபாத்தில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. 
 
இந்நிலையில் தனது திருமணம் தேதியை அவர் வெளியிட்டுள்ளார். அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளதாம். இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அப்போது நடிகர் சங்கத்தில் திருமணம் என கூறினாரே என கேட்காதீர்கள், விரைவில் விஷாலே இதற்கான பதில் அறிவிப்பார்.