செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 11 மே 2019 (18:05 IST)

காதலன் யாருன்னும் சொல்லிருகங்கப்பா! ஐஸ்வர்யா ராஜேஷ் கிண்டல்

'கனா' வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சிவகார்த்திகேயன் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் திடீரென ஐஸ்வர்யா ராஜேஷ் காதலில் விழுந்துவிட்டதாகவும் விரைவில் அவருக்கு திருமணம் என்றும், திருமணத்திற்கு பின்னர் அவர் நடிக்க மாட்டார் என்றும் செய்திகள் பரவியது. 
 
தமிழ் ஊடகங்களின் விதியின்படி ஒரு ஊடகத்தில் ஒரு செய்தி வந்துவிட்டால் அடுத்த சில நிமிடங்களில் அந்த செய்தி கண், காது, மூக்கு வைத்து மிக வேகமாக பரவும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனது காதல் குறித்த செய்திக்க்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
 
`ஹாய் நண்பர்களே.... எனது காதல் கதை குறித்த வதந்திகளைக் கேட்டு கொண்டிருக்கிறேன். வதந்தி பரப்புபவர்கள் அந்த காதலன் யார் என்பது குறித்து எனக்கும் சொல்லுங்கள். அவர் யார் எனத் தெரிந்துகொள்ள நானும் ஆவலுடன் இருக்கிறேன்" என கூறியதோடு, 'இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்புவதை தயவு செய்து முதலில் நிறுத்துங்கள். எனக்கு ஏதாவது நடந்தால் உங்களுக்குத் தெரிவிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் இப்போது சிங்கிளாக இருப்பதிலேயே சந்தோஷமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஐஸ்வர்யாவின் காதல் யாரோ ஒரு விஷமியின் கற்பனை என்பது உறுதியாகியுள்ளது