ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 மே 2019 (09:10 IST)

சிம்புவின் வருங்கால மனைவி யார் என்பது எனக்கு தெரியும்! பிரபல நடிகர்

டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் அடுத்ததாக சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. சிம்புவின் குணத்திற்கேற்ற வகையில் ஒரு பெண்ணை தேடி வருவதாக சமீபத்தில் டி.ராஜேந்தர் பேட்டி அளித்திருந்தார்.
 
இந்த நிலையில் 'அந்த நிமிடம்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கூல் சுரேஷ், சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவருக்கு பார்த்துள்ள மணப்பெண் யார்? அவருடைய வருங்கால மனைவி யார்? எப்போது கல்யாணம் என்ற விபரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். ஆனால் இப்போது நான் அதை கூற மாட்டேன். அதேபோல் யாரும் டி.ராஜேந்தரிடம் சிம்புவுக்கு திருமணம் எப்போது? என்று யாரும் அவரை கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் பேசினார்.
 
நடிகர் கூல் சுரேஷ், டி.ராஜேந்தர் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும், டி.ராஜேந்தரின் கட்சியில் கூல் சுரேஷ் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'அந்த நிமிடம்' படத்தில் கூல் சுரேஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாகவும் இந்த படம் வெளிவந்தவுடன் தனக்கு கோலிவுட்டில் நல்ல மார்க்கெட் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.