வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (15:02 IST)

ராகவா லாரன்ஸின் அந்த படம் ட்ராப்பா? ரசிகர்கள் ஏமாற்றம்!

பி வாசு இயக்கத்
தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக இருந்த சந்திரமுகி 2 படம் ட்ராப் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் சிவாஜி பிலிம்ஸ் வசம் உள்ள நிலையில் அதை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். மிகப் பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ளது என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் எந்தவொரு அப்டேட்டும் இல்லை.

இதனால் அந்த படம் எந்த அப்டேட்டும் இல்லை. இதனால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவர் நடித்த வேடத்தில் மற்றொரு நடிகர் நடிப்பதை பார்ப்பதா என்ற அச்சத்தில் இருந்தும் விலகியுள்ளனர்.