திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 30 ஜனவரி 2021 (23:23 IST)

விஜய்யுடன் சூப்பர் ஹிட் படம்…நினைவுகூர்ந்த லேடி சூப்பர் ஸ்டார்

கடந்த 1999 ஆம் ஆண்டு விஜய், சிம்ரன், மணிவண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் துள்ளாத மனமும் துள்ளும்.

இப்படம் வெளியாகி இன்றுடன் 22 வருடங்கள் ஆகிறது. எனவே இப்படத்தில் விஜய்க்கு ஜோடியான அக்கால லேடி சூப்பர் ஸ்டார் சிம்ரன் நடித்திருந்தார்.

 மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது இவர்களின் ஜோடி என்றாலும் காதல் கதை குட்டியை மையப்படுத்திய காட்சிகளும், ருக்கு கலெக்டராகி குட்டியைக் கண்டுகொள்வதும் கிளைமாக்ஸில் கண்ணீரை வரவழைக்கும்.

விஜய்யுடன் எழில் இணைந்த முதல் படம் இது. இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார். அதில் இப்படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. எனக்கு இப்படத்தில் நடித்ததற்காக#DinakaranFilmAwards #TNStateFilmAwards2 விருதுகள் கிடைத்தது எனத் தெரிவித்து, இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதுவைரலாகி வருகிறது.