சூர்யாவின் வளர்ச்சிக்கு ஜோதிகா தான் காரணமா? இணையத்தில் பரவும் வீடியோ!

Last Modified ஞாயிறு, 24 ஜனவரி 2021 (15:48 IST)

நடிகர் சூர்யாவின் அபரிவிதமான வளர்ச்சிக்கு ஜோதிகாவின் காதல்தான் முக்கியக் காரணம் என சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா திரையுலகில் 1996 ஆம் ஆண்டே அறிமுகமானாலும் 2002 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க திரைப்படம்தான் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்ற அவரின் முதல் திரைப்படம். அதுவரை சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் தவித்தார். சரியாக முகபாவனைகள் வராது, நடனமும் வராது என குறைகள் அவரிடம் இருந்தன. ஆனால் எல்லாவற்றையும் மாற்றிக்காட்டி முன்னணி ஹீரோவாக உருவானார்.

இது எல்லாவற்றுக்கும் காரணம் சூர்யா ஜோதிகா இடையிலான காதல்தான் என சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ஜோதிகா சூர்யாவுக்கு நடிப்புப் பயிற்சி கூட சொல்லிக் கொடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :