1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (10:16 IST)

மீண்டும் கமலுக்கு ஜோடியாக ஜோதிகா… எந்த படத்தில் தெரியுமா?

பாபநாசம் 2 படத்தில் கௌதமிக்கு பதிலாக ஜோதிகாவை நடிக்க வைக்கலாமா என்று பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ’பாபநாசம்’ மலையாளத்தில் மோகன் லால் நடித்த திருஷ்யம் படத்தின் ரீமேக். இதையடுத்து இப்போது திருஷ்யம் 2 படம் வெளியாகி பரவலானப் பாராட்டுகளைப் பெற்றது. அதனால் பாபநாசம் படம் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.

இந்நிலையில் முதல் பாகத்தில் கணவன் மனைவியாக நடித்த கமல் மற்றும் கௌதமி ஆகியோர் சொந்த பிரச்சனைக் காரணமாக இப்போது பிரிந்துள்ளனர். கமல் மீது கௌதமி தொடர்ந்து விமர்சனங்களை வைத்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் பாபநாசம் 2 படத்தில் கௌதமிக்கு பதில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜோதிகா கமலோடு தெனாலி மற்றும் வேட்டையாடு விளையாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.