கேப்டன் மில்லர் ரிலீஸில் தாமதம்… பின்னணி என்ன?
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்போது முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது தீபாவளி ரிலீஸில் இருந்து கேப்டன் மில்லர் திரைப்படம் பின் வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் தென்காசியில் கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் சில பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து திட்டமிட்டபடி காட்சிகளை படமாக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகாது எனவும் தெரிகிறது.