திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 10 மே 2023 (18:19 IST)

''கேப்டல் மில்லர்'' பட ஃபர்ஸ்ட்லுக், டீசர் எப்போது ரிலீஸ் ?புதிய தகவல்

captain miller
தனுஷ்  நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட்டை இன்று படக்குழு அறிவித்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ் இசையமைப்பில்  உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.  தமிழகத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என்று ரசிகர்கள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், இன்று  காலை 10 மணிக்கு கேப்டன் மில்லர் படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டனர். அதில், இன்று மாலை இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறினர். 

அதன்படி, இன்று மாலை, ஒரு புதிய போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளனர். அதில், ''கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் மாதம் வெளியாகும்; அதேபோல், இப்படத்தின் டீசர் வரும் ஜூலை மாதம் வெளியாகும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இதனால், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.