1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: புதன், 24 மே 2023 (21:13 IST)

''இந்தியாவின் டாப் இயக்குனர் படத்தில் நடிக்கிறேன்''- ஜிவி.பிரகாஷ்

gv prakashkumar
தமிழ் சினிமாவில்  முன்னணி இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் குமார். இவர், வசந்தபாலன் இயக்கிய வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதன்பின்னர், கிரீடம், பொல்லாதவன், குலேசன், அசுரன், சூரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். தற்போது தங்கலான், கேப்டன் மில்லர், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இசையமைப்பதுடன் , நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் ஜிவி.பிரகாஷ்குமார், டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது கள்வன், டியர், அடியே  போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இந்தியாவில் ஒரு பெரிய இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்,  '' இந்தியாவின் டாப் இயக்குனர் படத்தில் நடிக்கிறேன். அவர் சர்வதேச இயக்குனர். இப்படம் பற்றி அவரே அறிவிப்பார்'' என்று தெரிவித்துள்ளார்.

இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.