'கேப்டன் மில்லரில்' தனுஷ் குரலில் முதல் சிங்கில்...ஜிவி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்
கேப்டன் மில்லர் படத்தின் முதல் சிங்கிலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக ஜிவி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வைரலானது.
இப்படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடந்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ள நிலையில், வரும் டிசம்பர் அல்லது, ஜனவரியில் கேப்டன் மில்லர் பட ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறலாம் என கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஒரு முக்கிய அப்டேட்டை ஜிவி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
அவரது வலைதள பக்கத்தில்'', இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் …புழுதிக்கெல்லாம் விருந்து படைக்கும்…. நாந்தாண்டா நீதி… நாந்தாண்டா நீதி என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக'' குறிப்பிட்டு, தனுஷ்,அருண் மாதேஸ்வரனுடன் அவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.