1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 12 நவம்பர் 2023 (13:41 IST)

ஜிகர்தண்டா -2 படத்திற்கு வரவேற்பு - கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி

karthick subburaj
ஜிகர்தண்டா 2 படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் வரவேற்புக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நன்றி  தெரிவித்துள்ளார்.

பீஸா, பேட்ட உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜிகர்தண்டா 2 .  இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா  உள்ளிட்ட  நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை பீரியட் திரைப்படமாக உருவாக்கியுள்ள  நிலையில்  இந்த படம் தீபாவளியையொட்டி   நேற்று முன்தினம்  ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:

தெய்வத்திற்கும் இயற்கைக்கும், யானைகளுக்கும் ரசிகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் கூறிக் கொள்கிறேன். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு நீங்கள் அனைவரும் அளித்த வரவேற்புக்கு நன்றி என்று  நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.