1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 26 ஏப்ரல் 2023 (18:56 IST)

டாக்டர் சீட் கிடைக்காமல் கதறிய தனுஷின் அக்கா - விஜயகாந்த் செய்த உதவி!

தமிழ் சினிமா உலகில் பன்முக திறமை கொண்ட தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் , பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி தற்போது முன்னணி நடிகராக நிலைத்து நின்று உள்ளார்.
 
கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமி தம்பதிக்கு இளைய மகனாக பிறந்த தனுஷுக்கு ஒரு அண்ணன் இரண்டு அக்கா உள்ளனர். இதில் அண்ணன் செல்வராகவன் தமிழ் சினிமாவின் இயக்குனராக இருக்கிறார். மேலும் இருக்கு விமலா கீதா , கார்த்திகா தேவி இருவரும் மருத்துவராக உள்ளனர். 
 
மூத்த மகள் பல் மருத்துவராகவும் இரண்டாம் மகள் மகப்பேறு மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்கள். இது குறித்து சமீபத்திய பேட்டி பேசிய தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, என் மகள் கார்த்திகா மருத்துவக்கல்லூரியில் படிக்க வேண்டும் ஆசையில் தேர்வு எழுதியிருக்கிறார். ஆனால் கட் ஆஃப் மார்க்கில் குறைவாக மதிப்பெண் எடுத்திருந்தார்.
 
இதனால் மருத்துவராக முடியாத விரக்தியில் வீட்டில் உட்கார்ந்து அழுதுக்கொண்டிருந்தார்  கார்த்திகா. அந்த நேரத்தில் எங்கள் வீட்டிற்கு வந்த  விஜயகாந்த் கார்த்திகா அழுவதை பார்த்து விசாரித்து உடனே ராமச்சந்திரா மருத்துவமனையின் தலைமையான உடையாருக்கு கால் செய்து மருத்துவ சீட் வாங்கி கொடுத்தார் என நெகிழ்ச்சியோடு கூறினார்.