ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 மே 2023 (22:14 IST)

புஷ்பா பட நடிகருடன் இணைந்த செல்வராகவன்

புஷ்பா பட நடிகருடன் இணைந்து செல்வராகவன். நடித்துள்ளார் 

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனரான செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி,  புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி , ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன , இரண்டாம் உலகம், மாலை நேரத்து மயக்கம் , என். ஜி. கே உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில், நானே வருவேன் என்ற படத்தை இயக்கிய அவர்,பீஸ்ட்,  பகாசூரன் ஆகிய படங்களில்  நடித்திருந்தார்.

இந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் செல்வராகவன்.

இதுகுறித்து, இன்று தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ள செல்வராகவவன், புஷ்பா பிரபலம் சுனிலுடன் திரையைப் பகிர்ந்துகொள்வதில், மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.