திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (07:21 IST)

அந்த மாதிரி படம் எடுக்க சொன்னால் நான் தற்கொலை செய்துகொள்வேன்… படவிழாவில் மிஷ்கின் பேச்சு!

இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா மற்றும் மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் பாலாஜி இதற்கு முன் விடியும் முன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்தாலும் சில பல காரணங்களால் ரிலீஸ் தாமதமாகி வந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசும்போது “படத்தின் டிரைலர் அருமையாக இருந்தது. படத்தின் டைட்டிலான கொலைக்கு பயன்படுத்தியுள்ளா எழுத்துருவே சிறப்பாக இருந்தது. என்னிடமே பலரும் அடுத்து என்ன கொலை படமா சார் எனக் கேட்பார்கள்.

மகாபாரதம் ராமாயணம் ஆகியவற்றில் கொலை பற்றி சொல்லப்பட்டுள்ளது.  ஷேக்ஸ்பியரின் நாவல்கள் சில கொலைகளைப் பற்றியதுதான். என்னிடம் ரொமாண்டிக்காக ஜாலியாக படம் எடுக்க சொன்னால் நான் தற்கொலை செய்துகொள்வேன். அது எனக்கு சலிப்பை அளிக்கும். ” எனப் பேசியுள்ளார்.