1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 20 ஜூலை 2023 (09:32 IST)

எலான் மஸ்க் விரைவில் தமிழ் படம் தயாரிப்பார்… சீக்ரெட் பகிர்ந்த பிரபல இயக்குனர்!

இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் பாலாஜி இதற்கு முன் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விடியும் முன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்தாலும் சில பல காரணங்களால் ரிலீஸ் தாமதமாகி வந்தது.

இந்நிலையில் கொலை படத்தின் ரிலீஸை ஒட்டி ப்ரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர். அப்படி ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் பாலாஜி குமார் “விரைவில் எலான் மஸ்க் தமிழ் படம் தயாரிக்க வாய்ப்புள்ளது. அவர் எனது தங்கையின் நண்பர்.” எனக் கூறியது கவனத்தைப் பெற்றது.

சமீபத்தில் கிரிக்கெட் வீரரான தோனி தனது தயாரிப்பு நிறுவனத்தை தமிழில் தொடங்கி எல் ஜி எம் என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.