1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (06:55 IST)

20 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்தணும்… விஜய் ஆண்டனியின் ஆசை!

இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் பாலாஜி இதற்கு முன் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விடியும் முன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்தாலும் சில பல காரணங்களால் ரிலீஸ் தாமதமாகி வந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியிடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் ஆண்டனி “இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு கொஞ்சம் கேப் விட்டுள்ளேன்.

என்னுடைய நடிப்புக் கேரியர் முடிவதற்குள் 20 இசையமைப்பாளர்களையாவது அறிமுகப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்” எனப் பேசினார். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் நல்ல வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.