1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (17:33 IST)

எம்ஜிஆர் போல வெளிய வராமலே கேப்டன் வெல்வார்! – விஜய பிரபாகரன் நம்பிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், எம்ஜிஆர் போல வெளியே வராமலே வெற்றி பெறுவார் என அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் தேமுதிகவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில் அதிமுக தரப்பிலிருந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

மேலும் “விஜயகாந்த் பூரண நலமாக உள்ளார். எம்ஜிஆர் எப்படி களத்திற்கு வராமலே ஆண்டிப்பட்டியில் வென்றாரோ அதுபோல விஜயகாந்தும் வெளியே வராமலே தேர்தலில் வென்று காட்டுவார்” என அவர் தெரிவித்துள்ளார்.