புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 24 ஜூன் 2019 (19:01 IST)

"பிகில்" திரைப்படத்தின் உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம் - அதிகாரப்பூர்வ தகவல்!

தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து வெளிவந்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 


 
மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக மகன் விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடிக்கும் பிகில்  படத்தின் அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டிருந்தார். 
 
விஜய் பிறந்த நாளில் இந்த இரண்டு போஸ்டர்களை சமூகவலைகளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில்  தற்போது இப்படத்தின் அடுத்த அப்டேட்டை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
 
இப்படத்தின் வெளிநாட்டு தியேட்டரிகள் உரிமையை United India Exporters என்ற நிறுவனம் பிரம்மாண்ட தொகைக்கு கைப்பற்றியுள்ளது. பிகில் படத்தை உலகம் முழுவதும் அவர்கள் ரிலீஸ் செய்யவுள்ளனர்.
 
அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.