புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 24 ஜூன் 2019 (15:52 IST)

அடேங்கப்பா...! தமன்னா வாங்கியிருக்கும் வீட்டோட விலையை கேட்டால் ஆடிப்போய்டுவீங்க!

தமிழ், தெலுங்கு , கன்னடா , உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. மேலும் இவர் பாலிவுட் படங்களிலும் நடித்து ஆல் ரவுண்டு வருகிறார். தமிழ் சினிமாவில் த்ரிஷா, நயன்தாராவிற்கு பின் அதிக காலமாக முன்னணி நடிகையாக நடிக்கும் பெருமை இவரை தான் சேரும்.


 
அந்த அளவிற்கு விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பதில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வந்த இவருக்கு சூப்பர் லக் அடித்தது பாகுபலி படத்திற்கு பின் தான். அப்படத்தில் தனக்கு கிடைத்த புகழை வைத்து அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 
சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த தேவி 2 படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் ஓரளவு கல்லா கட்டியது. அதை தொடர்ந்து தற்போது, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். 
 
தற்போது மும்பை அந்தேரியில் உள்ள லோகண்ட்வாலா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்மன்னா, மும்பை வெர்சோ வாவில் பிரபல பில்டர் சமீர் போஜ்வானியிடம் ரூ.16 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.


 
’பே வியூ’ என்ற பெயர் கொண்ட, 22 மாடிகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 14 வது தளத்தை வாங்கி இருக்கிறார் தமன்னா. இந்த வீட்டின் ஒரு சதுர அடி விலை ரூ.80,778. இப்பகுதியில் விற்கப்படும் விலையை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தரகர்களின் கூற்றுப்படி இந்த கட்டிடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வர இருக்கும் புதிய கட்டிடத்திற்கு சதுர அடி ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. 
 
அப்படியிருக்க தமன்னா 2,055 சதுர அடி பிளாட்டிற்கு ரூ.16 கோடி தமன்னா செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த புதிய வீட்டில்  தமன்னா மற்றும் அவரது பாட்டி என இருவர் மட்டுமே குடியேறவிருப்பது குறிப்பிடத்தக்கது.