வியாழன், 6 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 29 ஜனவரி 2025 (10:29 IST)

90 கோடி ரூபாய் நஷ்டம்.. அப்போதுதான் விஜய் கைகொடுத்தார்- மாஸ்டர் தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

மாஸ்டர் படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தயாரிப்பில் இறங்கினார் விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ. இவர் ஏற்கனவே விஜய்யின் ஆரம்பகால படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். அதற்கான நன்றிக்கடனாகதான் விஜய் அவருக்கு மாஸ்டர் படத்தின் வாய்ப்பை அளித்தார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் வரிசையாக படங்களை தயாரிக்கும் ஆர்வத்தில் உள்ள அவர் சமீபத்தில் அவருடைய மருமகனான ஆகாஷ் முரளி நடிப்பில் ‘நேசிப்பாயா’ என்ற படத்தை தயாரித்தார். அந்த படம் அதிக பட்ஜெட்டில் தயாரித்தாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் மாஸ்டர் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை பெற்றது எப்படி என்பது குறித்து பிரிட்டோ பேசியுள்ளார். அதில் “நான் கால்பந்தாட்ட போட்டி ஒன்றில் முதலீடு செய்து  90 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அந்த சமயத்தில்தான் மாஸ்டர் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை விஜய் எனக்குக் கொடுத்தார். அந்த படத்துக்கு நான்தான் தயாரிப்பாளர். பலரும் லலித்தான் தயாரிப்பாளர் என நினைக்கின்றனர். அவர் அந்த படத்துக்கு லைன் புரொடியூசர் மட்டும்தான்” எனக் கூறியுள்ளார்.