"பிக்பாஸுக்கு சென்ற சாண்டி" உண்மையை ட்விட்டரில் கொட்டிய முன்னாள் காதலி!

Last Updated: திங்கள், 24 ஜூன் 2019 (15:13 IST)
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் வரவாக கடந்த 2017-ம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி சின்னத்திரையின் முன்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒன்று கூடச்செய்த நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன்.


 
2017ம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி  தொடர்ந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இந்த பிக்பாஸ் 3யும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று பிரமாண்டமாக ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் மொத்தம் 13 பேர் கலந்துகொண்டனர். 
 
இதில்  தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான போட்டியாளர்களில் ஒருவராக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவரின் முதல் மனைவி   காஜல் 2017 ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். 
 
காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை மீண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் சாண்டி.   தற்போது இவர்களுக்கு ஒரு அழகான பெண்குழந்தையும் உள்ளது. 


 
இந்தநிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்துள்ள சாண்டிக்கு அவரின் முன்னாள் காதலி நடிகை காஜல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன் ஒருவர் சாண்டி காஜல் பசுபதியின் முதல் காதலி என்று கூற,  அதற்கொரு பதிலளித்த காஜல் பர்ஸ்ட் லவ் இல்லை, கடைசி லவ் தான் , நான் அட்டகத்தி தினேஷ் மாதிரி’ என்று பதிலளித்தார். 


 
பிறகு வேறொரு நபர், அப்பறோம் ஏன் பிரேக் அப்? என்று கேட்க , சாண்டியுடனான காதல் முறிவு பற்றியும் மனதிறந்துள்ளார். "ப்ரேக்கப் அது பெரிய கதை, நம்ம லவ் டார்ச்சர் தான். வல்லவன் ரீமாசென் மாதிரி பண்ணா யார் தாங்குவா என்று பதிலளித்துள்ளார். என்ன தான் டார்ச்சர் செய்திருந்தாலும் காஜலின் இந்த வெளிப்படையான குணத்தை பார்த்த அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :