செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 ஜூன் 2019 (14:32 IST)

வருமா சிந்துபாத் ? – வைட்டிங் லிஸ்ட்டில் ஜீவா, யோகிபாபு & லஷ்மி ராமகிருஷ்ணன் !

சிந்துபாத் படம் தாமதமாகிக் கொண்டு இருப்பதால் அதனால் பல படங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள திரைப்படமான 'சிந்துபாத்' ரிலீஸ் தேதி ஜூன் 21 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிலபலக்  காரணங்களால் ரிலிஸ் ஆகாமல் ஒதுங்கிக் கொண்டது.

இதுபற்றி விசாரித்ததில் சிந்துபாத் படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ள கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பாகுபலி முதல், இரண்டாம் பாகங்களை தமிழில் வெளியிட்ட நிறுவனமாகும். அப்போது பாகுபலி தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்நிறுவனம் சார்பில் ராஜராஜன் ரூ. 17.60 கோடி பாக்கி வைத்துள்ளதால் படத்தை ரிலிஸ் செய்ய ஹைதராபாத் கோர்ட்டில் தடை வாங்கியுள்ளனர்.

இந்தப் பிரச்சனையால் நேற்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த சிந்துபாத் நேற்றுக் காலை வரை தியேட்டர் உரிமையாளர்களுக்கு டிஜிட்டல் கண்டட் புரொவைடர்ஸ் எனப்படும் டி.சி.பி (DCP)யிடமிருந்து வில்லங்கச் சான்றிதழ் கிடைக்காததால் படத்தை திரையிடவில்லை எனத் தகவல் கிடைத்துள்ளது.

இப்போது இரு தரப்புக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனால் சிந்துபாத் படம் எப்படியும் ஜூன் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிந்துபாத் படம் தள்ளிக்கொண்டே போவதால் சிறு படங்களான தர்மபிரபு, ஷவுஸ் ஓனர் மற்றும் மீடியம் பட்ஜெட் படமான கொரில்லா ஆகியப் படங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி படம் வெளியானால் தங்கள் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காது என அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால் அவர்களின் படங்களைப் பொறுத்தே மற்றப் படங்கள் ரிலிஸ் ஆகும் எனத் தெரிகிறது.