செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (12:35 IST)

தெறிக்கும் "பிகில்" சத்தம்.. சற்றும் பின் வாங்காத "கைதி"!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வருகிற தீபாவளி தினத்தில் ரீஸாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் , பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகில் திரைப்படத்துடன் நடிகர் கார்த்தி நடித்துள்ள கைது படம் போட்டிபோட்டுக்கொண்டு ரிலீசாகவுள்ளது. 


 
பொதுவாக பெரிய நடிகர்களின் படம் வெளிவருகிறதென்றாலே சின்ன பட்ஜெட் படங்கள் பின்வாங்கிக்கொள்ளும். ஒருவேளை எதிர்த்துதான் பார்ப்போமே என போட்டிபோட்டுக்கொண்டு லிஸ்டில் வந்தாலும்,  பின்னர் தியேட்டர்கள் கிடைக்காமல் கடைசி நேரத்தில் தானாகவே ஒதுங்கிக்கொள்ளும். ஆனால், கைதி எதையும் எதிர்கொண்டு நிற்பேன் என்று கூறி பிகிலுடன் போட்டிபோட்டுக்கொண்டு ரிலீசாகவுள்ளது. 
 
பிகில் படம் வெளிவருவதற்கு முன்னதாகவே 20 சதவீதம் வரை லாபம் பார்த்துவிட்டதாகவே கூறப்படுகிறது. இத்தனைக்கும் அட்லீ சொன்ன பட்ஜெட்டை  விட, 50 கோடிக்கும் அதிகமாக செலவாகிவிட்டது. ஆனாலும், ப்ரீ ரிலீஸ் வியாபரத்திலேயே பிகில் லாபம் பார்த்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். இப்படம் தமிழகத்தில் மட்டும்  சுமார் 700+ திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும் , ஆந்திரா , தெலங்கானாவில் பிகில் 675 தியேட்டர்களில் பிகில் ரிலீசாகிறது.  குறிப்பாக, ஹைதராபாத்தில் மட்டும் 275 தியேட்டரை பிகில் தன் வசப்படுத்தியுள்ளது. கேரளா முழுவதும் சுமார் 200 தியேட்டர்களில் பிகில் ரிலீசாகிறது. அப்படியே தமிழகத்தில் வந்தால் மதுரையில் மட்டும் 13 தியேட்டர்களில் 24 ஸ்க்ரீன்களில் பிகில் ரிலீஸ் ஆகிறது. இவ்வளவு பெரிய போட்டி இருப்பது தெரிந்தும் "கைதி" பிகிலும் எதிர்த்து நின்று மோதுகிறது. 
 
தமிழகத்தில் மட்டும் சுமார் 300 தியேட்டர்களில் கைதி ரிலீசாகிறது. மால்களை பொறுத்தவரை, கைதி படமும் நிறைய தியேட்டர்களில் ரிலீசானாலும் ஸ்க்ரீன்களின் எண்ணிக்கை பிகிலை கம்பேர் செய்து பார்க்கும்போது மிக மிக குறைவு தான். லோகேஷ் கனகராஜின் படம் என்பதால் பிகிலுக்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில்  கைதி படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது.