வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (12:01 IST)

அடேங்கப்பா..நம்ம சமந்தாவா இது நம்பவே முடியலையே - வைரல் வீடியோ!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.


 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். கடைசியாக இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  
 
இதற்கிடையில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டிருக்கும் சமந்தா தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.