புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (08:30 IST)

பிகில் கைதி பட தயாரிப்பாளர்கள் டுவிட்டரில் மறைமுக மோதலா?

வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு அக்டோபர் 25-ஆம் தேதி விஜய் நடித்த பிகில் திரைப்படம், கார்த்தி நடித்த கத்தி திரைப்படம் வெளியாக உள்ளது. இரு படங்களுக்கும் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த இரு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் விஜய்யின் பிகில் திரைப்படம் சோலோவாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாகி வசூலில் சாதனை புரியும் என்று கருதப்பட்ட நிலையில், திடீரென கைதி ரிலீஸ் அறிவிப்பு வந்ததால் படக்குழுவினர் அதிருப்தி அடைந்தனர். இதனை அடுத்து இரு பட தயாரிப்பாளர்களும் அவ்வப்போது டுவிட்டரில் மறைமுகமாக மோதி வருவதாக தெரிகிறது. ‘கைதி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் பிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதே இதற்கு சான்றாக உள்ளது. 
 
இந்த நிலையில் பிகில் படத் தயாரிப்பு தரப்பு ’நாங்கள் நல்ல படம் எடுத்து உள்ளோம். எனவே நாங்கள் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை’ என்று திடீரென கருத்து தெரிவித்த நிலையில் இதற்கு பதிலடியாக சற்றுமுன் கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது டுவிட்டரில், ‘ நான் ஒரு நல்ல பாம்பு, எனவே நல்ல படம் மட்டுமே எடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். நித டுவீட் ‘பிகில்’படக்குழுவினர்களுக்கு கொடுக்கப்பட்ட பதிலடியாக கருதப்படுகிறது 
 
பிகில், கைதி என இரண்டு படங்களின் தயாரிப்பாளர்கள் மோதிக்கொண்டாலும் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது ரசிகர்களே என்பது குறிப்பிடத்தக்கது