வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (11:40 IST)

ஸ்னேகாவுக்கு கடும் பிரசவ வலி...இரண்டாவது குழந்தை.. கண்ணீருடன் கூறிய பிரசன்னா!

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நடிகையான சினேகா புன்னகை அரசி என அழைப்பட்டு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவர். இளமையான புன்னகைக்கு சொந்தக்காரரான சினேகா கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த 'என்னவளே'  படத்தின் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். 

 
தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த இவர் 2000ம் காலகட்டங்ககளில் இயக்குனர்களின் ராசியான நடிகையாக நடிகையாக பார்க்கப்பட்டார்.  தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஜய்யுடன் 'வசீகரா', அஜித்துடன் 'ஜனா', விக்ரமுடன் கிங்', சுர்யாவுடன் 'உன்னை நினைத்து', தனுஷுடன் 'புதுப்பேட்டை', சிம்புவுடன் 'சிலம்பாட்டம்',  உள்ளியிட்ட படங்களில் பரவலாக பேசப்பட்டாலும் ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், போன்ற படங்கள் சினேகாவிற்கு பெரும் புகழை பெற்று தந்தது. 
 
இதற்கிடையில் 2009ல் வெளிவந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிக்கும்போது அப்படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்த சினேகா பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து அவரை கடந்த 2012ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.  அதையடுத்து கடந்த 2015ல் இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர். 
 
இதற்கிடையில் தற்போது மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார் சினேகா தங்களது இரண்டாவது குழந்தைக்காக சினேகா - பிரசன்னா இருவரையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். சினேகா எல்லோரிடமும் எளிமையாக பழகும் குணம் தான் அவர் மீது காதல் வரவைத்தது என பிரசன்ன கூறியுள்ளார். மேலும்,  ஒவ்வொரு அம்மாவும் தெய்வம் ஆவது அவர்களின் பிரசவத்தின் போதுதான்.நான் அந்த நேரங்ககில் சினேகா  கஷ்டங்களை கூட இருந்து பார்த்திருக்கிறேன்.  சினேகாவுக்கு பிரசவ வலி வராமல் இருந்தது. அதனால் விஹான் அறுவை சிகிச்சை மூலமாக தான் பிறந்தான். என்னால் அதை பார்க்க முடியாமல் தலை சுற்றி போய் ஓரமாக அமர்ந்து விட்டேன். 
 
சினேகா சின்ன தலை வலியை கூட தாங்கிக்கொள்ள மாட்டார் அவர் எப்படி பிரசவ வலியை பொறுத்துக் கொண்டார் என்று தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இப்போது நாங்கள் இரண்டாவது குழந்தைக்காக காத்திருக்கிறோம். நீங்ககள் அனைவரும் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார் பிரசன்னா.