வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (07:39 IST)

ரியோ சவாலான போட்டியாளரா? காமெடி செய்யும் பிக்பாஸ்!

ரியோ சவாலான போட்டியாளரா? காமெடி செய்யும் பிக்பாஸ்!
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக என்ட்ரியான அர்ச்சனா அனைவருக்கும் விருதுகளை வழங்கினார் என்பது தெரிந்ததே. அதில் ரம்யா பாண்டியன் மற்றும் ரியோ ஆகிய இருவருக்கும் சவாலான போட்டியாளர்கள் என்ற விருதை வழங்கினார் 
 
சுரேஷ் சக்கரவர்த்திக்கு எவிக்சன் பாஸ் கிடைக்காமல் செய்த ரம்யா பாண்டியன் உண்மையிலேயே சவாலான போட்டியாளர் தான் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். அது மட்டுமின்றி தனக்கு கிடைக்க வாய்ப்பு இருந்த எவிக்சன் பாஸை ஆஜித்துக்கு விட்டுக் கொடுத்ததும் அவருடைய பெருந்தன்மையை காட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் ரியோவுக்கு சவாலான போட்டியாளர் என்ற விருதை பிக்பாஸ் கொடுத்துள்ளது தான் மிகப்பெரிய காமெடியாக பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 10 நாட்களில் எதையும் உருப்படியாக செய்யாதவர் ரியோ. ஒருசில நேரங்களில் தேவையில்லாமல் கோபப்பட்டு டென்ஷன் ஆகி கொண்டிருக்கும் அவர் பார்வையாளர்களின் அதிருப்தியை அதிகம் சம்பாதித்துள்ளார் 
 
அப்படி இருக்கும்போது அவருக்கு சவாலான போட்டியாளர் என்ற விருது எப்படி பொருந்தும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. விஜய் டிவி தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் நல்ல விருதை கொடுத்துள்ளதா? என்பது என்ற சந்தேகம் வருகிறது 
 
அதே நேரத்தில் கேப்ரில்லா முதல் இரண்டு மூன்று நாட்களில் அமைதியாக இருந்தாலும் அதன் பிறகு அவர் சகஜமாகப் பழகத் தொடங்கி விட்டார். ஆனால் அவருக்கு ’காணவில்லை’ என்ற விருது கொடுத்துள்ளதும் கொஞ்சம் கூட பொருத்தமில்லாதது. மொத்தத்தில் பிக்பாஸ் கொடுத்த ஒரு சில விருதுகள் பார்வையாளர்களுக்கு திருப்தி இல்லாமல் உள்ளது என்பதே உண்மையாகும்