1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (10:31 IST)

ரம்யா பாண்டியனுக்கு ஜாதி வெறியா? விஷத்தை பரப்பும் விஷமிகள்!

ரம்யா பாண்டியனுக்கு ஜாதி வெறியா? விஷத்தை பரப்பும் விஷமிகள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்கிறோம் என்ற பெயரில் பொது மக்களிடையே ஜாதி எனும் விஷத்தை பரப்பும் விஷமிகள் அதிகமாகிக் கொண்டு வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் இதுவரை நாம் பார்த்த வரையில் அனைவரிடமும் சகஜமாக தான் பேசி வருகிறார். ஆனால் அவர் வேல்முருகனிடம் சரியாக பேசவில்லை, பழகவில்லை என்றும் அவர் ஜாதி வேறுபாடு பார்ப்பதாகவும் நெல்லையை சேர்ந்தவர் என்பதால் அந்த குணம் அவரிடம் இருப்பதாகவும் சில விஷமிகள் சமூக வலைதளங்களில் விஷத்தை பரப்பி வருகின்றனர்
 
நெல்லையை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று இந்த விஷமிகளுக்கு யார் சொன்னது? என்று தெரியவில்லை. சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு ஃபாலோயர்கள் கிடைத்துவிட்டால் தங்கள் இஷ்டத்துக்கு கற்பனை கலந்து விஷத்தை கக்கும் நிகழ்வு அதிகமாகிக் கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆனால் விஷமிகள் தான் ரம்யா பாண்டியன் ஆஜித்துக்கு எவிக்சன் பாசை விட்டு கொடுத்தவுடன் பல்டி அடித்து பேசியதும் காமெடியாக உள்ளது. ஒரு நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக பார்த்துவிட்டு போகாமல் அந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று விஷத்தை பரப்பி ஜாதி வெறியை தூண்டி விடுவதை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்