வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 15 அக்டோபர் 2020 (13:53 IST)

குட்டி பிக்பாஸ்.... ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் கடந்த இரண்டு வாரங்களாக TRP -யில் அடிச்சு நொறுக்கி முன்னுக்கு சென்றுவிட்டது. இதனால் விஜய் டிவியுடன் போட்டிபோட்டு முன்னேறி வந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி எப்போதும் போலவே பின்னுக்கு வந்துவிட்டது.

இந்நிலையில் தற்ப்போது மீண்டும் விஜய் டிவியுடன் போட்டி போட எண்ணிய ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் பிக்பாஸ் நிகழ்ச்சியை அப்படியே அப்பட்டமாக காப்பியடித்தார் போல் சீரியல் பிரபலங்களை வைத்து புதிய நிகழ்ச்சி ஒன்றை துவங்கியுள்ளார்.

26 நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020 என்ற இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு ஒரே வீட்டில் தங்கவைக்க படுவார்கள். வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ இன்ஸ்டாவில் வெளியாகி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.