வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 15 அக்டோபர் 2020 (15:31 IST)

அர்ச்சனா தான் அடுத்த காயத்ரி போல? ஓவரா ஆடாதம்மா உன்ன புஷ்வானம் ஆக்க கொஞ்ச நேரம் ஆகாது!

தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இன்று வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்துள்ளார். அர்ச்சனா வந்துவிட்டார் நிகழ்ச்சி ஸ்வாரஸ்யத்திற்கும்,காமெடிக்கு பஞ்சமிருக்காது என குஷி ஆன ஆடியன்ஸ் இரண்டாவது ப்ரோமோவிலே அர்ச்சனாவின் நடவடிக்கைகளை வெறுக்க ஆரம்பித்துவிட்டனர்.

சுரேஷ் ஒரு மாதிரியான ஆளாக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பேசினாலும் அவர் தான் பிக்பாஸ் கிங். கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கும் அவரை பிடிக்க ஆரம்பித்து அவருக்காக சப்போர்ட் செய்பவர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இப்படியான நேரத்தில் இது தெரியாமல் உள்ளே நுழைந்த அர்ச்சனா தொடர்ந்து சுரேஷ் மற்றும் சனம் ஷெட்டியை டார்கெட் செய்து நோஸ்கட் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரமோவில் அர்ச்சனா ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவருக்கும் பட்டம் கொடுத்து அவரின் கேரக்டரை டேமேஜ் செய்துள்ளார். அந்த வகையில் பாலாஜி மோகனுக்கு  "ஸ்ம்ப்ளி வேஸ்ட்" , Atmosphere artist ஷிவானிக்கும், சவாலான போட்டியாளர் ரம்யா பாண்டியனுக்கும், "BBT 4 ட்ரெண்டிங்" அனிதாவிற்கும், "காணவில்லை" ஆஜித் மற்றும் கேபிரில்லாவிற்கும் , ஆமாம் சாமி நிஷாவிற்கும், நமத்துப்போன பட்டாசு சனம் ஷெட்டிக்கும் வழங்கி இன்சல்ட் கொடுத்துள்ளார். அர்ச்சனா புதுசு என்பதால் ஓவரா ஆடாதீங்க இன்னும் கொஞ்சம் நாள் போனால் நீயே புஷ்வானம் ஆகிடுவ என ஆடியன்ஸ் அவரை கண்டித்து வருகின்றனர்.