‘எவன் அவன்? முதல் நாளே ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா!

siva| Last Modified வியாழன், 15 அக்டோபர் 2020 (12:38 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த போட்டியாளராக அர்ச்சனா இன்று காலை பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் என்பதும் அவர் நுழைந்த நிமிடம் முதல் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறியது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது அர்ச்சனா வந்தவுடன் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே கடந்த பத்து நாள் நிகழ்ச்சியை டிவியில் பார்த்து தயாராகி வந்திருக்கும் அர்ச்சனா சுரேஷ் தான் தனது முதல் டார்கெட் என்பதை முடிவு செய்து அவரை வம்புக்கு இழுக்க முயற்சிப்பதும், சுரேஷுக்கும் அர்ச்சனாவுக்கும் காரசாரமான அதே நேரத்தில் காமெடியாக விவாதம் நடைபெறுவது தான் இன்றைய இரண்டாவது புரமோ
அதில் ’எவன் அவன்’ என்று அர்ச்சனா கேட்க அந்த கேள்வி சுரேஷிற்கு நிச்சயம் அதிர்ச்சியை அளித்திருக்கும். சுரேஷுக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்றிருக்கும் அர்ச்சனா அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளால் சுரேஷ் கலங்கடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் சுரேஷ் இதற்கெல்லாம் அசரப்போவதில்லை. 15 போட்டியாளர்களை எளிதில் சமாளித்த அவருக்கு அர்ச்சனாவை சமாளிப்பது ஒரு பெரிய காரியமாக இருக்காது

ஆனாலும் சுரேஷிற்கு இன்று முதல் இன்னொரு எதிரி உருவாகி விட்டார் என்பதுதான் உண்மை


இதில் மேலும் படிக்கவும் :