1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 3 ஜூலை 2018 (22:16 IST)

இப்படி மாறிட்டாரே பாலாஜி ; மனம் மாறுவாரா நித்யா? : வீடியோ பாருங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய 2வது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 
இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ காலையில் வெளியானது. அதில், யாஷிகா ஆனந்திடம் மஹத் முத்தம் கேட்க, அதை மும்தாஜ் கண்டிக்க, அவருக்கும், மஹத்துக்கும் இடையே மோதல் எழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
 
இந்நிலையில், தற்போது 2வது புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், நித்யாவிற்கு அவரின் கணவர் பாலாஜி ஜூஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால், நித்யா வெட்கப்பட்டு சிரிப்பதும், அதை மற்ற போட்டியாளர்கள் பார்த்து ரசிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
 
நித்யாவை கண்ட மேனிக்கு கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்த பாலாஜி தாடியை எடுத்துவிட்டு, சாந்தமாக மாறிவிட்டார். தற்போது நித்யா மீது அன்பையும் பொழிய தொடங்கியிருக்கிறார். எனவே, அவரை கணவராக நித்யா மீண்டும் ஏற்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.