செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2019 (20:07 IST)

எப்போது கன்னித்தன்மை இழந்தீங்க! ரசிகரின் கேள்விக்கு மழுப்பலான பதில்!

கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களாலும் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு அடுத்த இடத்தில் படு டேமேஜ் செய்யப்பட்டவர் வைஷ்ணவி.


 
இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டு மக்களால் விமர்சிக்கப்பட்டார்.
 
வைஷ்ணவி விமானியாக இருக்கும் அஞ்சன் என்பவரை காதலித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் வேலை செய்யும் அஞ்சனும், வைஷ்ணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்களாம். இந்நிலையில் அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள்
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
வைஷ்ணவி துணிச்சலான பெண். மனதில் பட்டதை மறைக்காமல் பேசுகிறவர். அவர் மற்ற பிரபலங்களை போன்று காதலை மறைத்து வைக்கவில்லை. அஞ்சனை காதலிப்பதை கூட  அவரே சமூக வலைதளங்களில் பல முறை தெரிவித்துள்ளார். எப்படித் தான் அஞ்சன் என்னையும் பொறுத்துக் கொள்கிறாரோ என்று தன்னை தானே கலாய்த்துள்ளார் வைஷ்ணவி 


 
இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர்  இன்ஸ்டாகிராமில் வைஷ்ணவியிடம் நீங்கள் எந்த வயதில் கன்னித்தன்மையை இழந்தீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு வைஷ்ணவி வர்ஜின்  விமானத்தின் புகைப்படத்தை பதிவிட்டு , எனக்கு சொந்தமில்லாததை நான் எப்படி இழக்க முடியும் என்று சூசகமாக பதில் அளித்துள்ளார்.