வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2019 (14:24 IST)

பிக் பாஸ் கணேஷ் - நிஷா வீட்டிற்கு வரவிருக்கும் புதுவரவு!

பிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராமன் - நிஷா வீட்டில் விரைவில் "குவா குவா" சத்தம் கேட்கவிருக்கிறது இதனை கணேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2017 ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் "அபியும் நானும்"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இதனைத் தொடர்ந்து  'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் . 


 
தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான‌ நிஷாவை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது மனைவி கர்ப்பமாக இருப்பதாக  டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 
“எங்கள் குடும்பத்திற்கு வர இருக்கும் புதுவரவை வரவேற்க காத்திருக்கிறோம். அதற்காக வாழ்த்துக்களை பெற நிஷா கணேஷுக்கு பாரம்பரிய சீமந்தம் நடத்தப்பட்டது. என் வாழ்வின் அப்பா ஆகும் தருணத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். என்னை நானே வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது” என கணேஷ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.