1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2019 (12:23 IST)

இதெல்லாமே பொய் நம்பாதீங்க – ரைசா.! இத்தன வருஷம் இதையா நம்பிட்டு இருந்தோம்!

பிக் பாஸ் குயின் "ஓவியா" என்றால் பிக் பாஸ் பிரின்சஸ் "ரைசா"...! அந்த அளவிற்கு பிக் பாஸ் சீசன் ஒன்றில் இவர்கள் இருவரும் பிரபலமடைந்து தங்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டனர். 
 

 
மாடலிங் துறையில் இருந்த ரைசா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்து பின்னர் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்த ரைசா ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரமெடுத்தார்.  அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது ‘ஆலிஸ்’ என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன்  நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் சமீபத்தில் நடிகை ரைசா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் விக்கிப்பீடியாவில் தன்னைப்பற்றி இருக்கும் தகவல்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து  பதிவிட்டிருந்தார். அதில் இருக்கும் தகவல்கள் பொய்யானவை என்று குறிப்பிட்டுள்ளார் ரைசா. 
 

 
இத்தனை நாட்கள் விக்கிபீடியாவில் ரைசாவை பற்றி இருக்கும் தகவல்கள் உண்மை என்று நம்பி வந்த ரசிகர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.  மேலும் விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தகவல்களை  பதிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.