ப்பாஹ் என்ன அதிசியம்.! முதன்முறையாக ஜூலியின் பதிவிற்கு குவியும் பாராட்டு.!

Last Updated: புதன், 3 ஏப்ரல் 2019 (12:16 IST)
யாராலும் நம்ம முடியாத அளவிற்கு முதன் முதலாக பிக் பாஸ் ஜூலியின் பதிவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்ட ஜூலியை வீர தமிழச்சி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி  அத்தனை பெயரையும் கெடுத்துக்கொண்டார். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹேட்டர்ஸ்கள்  உருவானார்கள் . இவரைப் பற்றிய எந்த செய்திகள் வந்தாலும் , சமூகவலைதளத்தில் ஜூலியை கிண்டலடிக்கவே ஒரு குரூப் இருக்கும்.  ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோ, சினிமா என அடுத்தடுத்து தனது கேரியரில் முன்னேறிக்கொண்டே செல்கிறார் ஜூலி. 

இந்நிலையில்  ஜூலியின்  சமீபத்திய ட்விட்டர் பதிவிற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் சிலர் இந்த புகைப்படத்திற்கு நல்லபடியாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். 
இதில் மேலும் படிக்கவும் :