திங்கள், 8 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 டிசம்பர் 2025 (13:59 IST)

திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: நடிகை தரப்பு அறிவிப்பு

திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: நடிகை தரப்பு அறிவிப்பு
கேரளாவில் முன்னணி நடிகை பாலியல் துன்புறுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் போதிய ஆதாரம் இல்லை என கூறி எர்ணாகுளம் நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று பாதிக்கப்பட்ட நடிகை தரப்பு வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர். 2017-ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக, நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே சதி நடந்ததாகக்காவல்துறை குற்றம்சாட்டியிருந்தது.
 
இந்த வழக்கில், நடிகையின் ஓட்டுநர் பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்க் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 12-ஆம் தேதி அறிவிக்கப்படும். 
 
இந்நிலையில் திலீப் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக நடிகை தரப்பு அறிவித்துள்ளதால், இந்த வழக்கில் அடுத்த கட்ட சட்ட போராட்டம் தொடரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran