இளையராஜாவை தேடுனாங்க.. எங்கேயும் போகாத மனுஷன்.. எங்க போனாரு தெரியுமா?
தமிழ் திரையுலகில் ஒரு முடி சூடா மன்னராக இசைத்துறையில் கோலோச்சி வருபவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கடந்து தன்னுடைய இசையால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அவருக்கு நிகர் அவரே. அவருடைய இசையில் அமைந்த பாடல்களை தான் இன்றைய தலைமுறைகள் கேட்டு மகிழ்ந்து வருகின்றனர். எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ப அவருடைய இசை பாடல்கள் அமைந்திருக்கின்றன. தன்னுடைய துறையில் ஜாம்பவானாக இருக்கும் இளையராஜா எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கும் வெளியில் வரமாட்டார்.
அதே போல எந்த ஒரு துக்க நிகழ்விலும் அவரை பார்க்க முடியாது. அவர் ஒரே ஒரு நாளில் மட்டும் தான் வெளியில் வருவார். அதுவும் பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலம் மட்டும் போவார் .மற்ற 29 நாட்களும் அவர் ரெக்கார்டிங் தியேட்டரில் தான் இருப்பார் என பிரபல சினிமா தயாரிப்பாளர் டி சிவா கூறியுள்ளார். இப்படி இருக்கும் இளையராஜா 1991 ஆம் ஆண்டு ஒரு நாள் காணாமல் போய்விட்டார். அன்று ரெக்கார்டிங் தியேட்டருக்கு போனவர்கள் அனைவருக்குமே ஒரு அதிர்ச்சி.
இளையராஜாவை காணவில்லை என தேடிக் கொண்டிருந்தார்கள். எங்கே போனார் என யாருக்குமே தெரியவில்லை. ஆனால் அவர் போனது தயாரிப்பாளர் டி சிவாவின் திருமணத்திற்கு. அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி சிவாவுக்கு 1991 ஆம் ஆண்டு தான் திருமணம் நடந்தது. கோபிசெட்டிபாளையத்தில் அவருடைய திருமணம் நடந்திருக்கிறது. அந்த காலத்தில் அவர் சினிமா துறையில் இல்லை இருந்தாலும் இளையராஜாவுக்கும் டி சிவாவுக்கும் இடையே அப்படி ஒரு நட்பு.
அதனால் அவருடைய திருமணத்திற்கு தான் அன்று இளையராஜா சென்றிருக்கிறார். அங்கு டி சிவாவை வாழ்த்தி பாடல்களையும் பாடி இருக்கிறார். இன்று என்னுடைய மூன்று ரெக்கார்டிங்கை கேன்சல் செய்து உன் திருமணத்திற்கு வந்திருக்கிறேன் என இளையராஜா டி.சிவாவிடம் அன்று கூறினாராம். அதைப்போல தனது 25 வது ஆண்டு திருமணத்தை கொண்டாடும் வகையில் ஒரு சிறிய விழா ஏற்பாடு செய்திருந்தாராம் டி சிவா. அதற்கு இளையராஜாவை அழைத்திருக்கிறார். இளையராஜாவும் டி சிவாவின் 25 ஆவது ஆண்டு திருமண விழாவிற்கு சென்று அப்பொழுதும் அவரை போய் வாழ்த்தி இருக்கிறார்.
இதை சமீபத்தில் தயாரிப்பாளர் டி சிவா ஒரு பேட்டியில் கூறும்பொழுது இப்படி எனக்கும் இளையராஜாவுக்குமான நட்பு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்து என்னுடைய மகள் பேரக்குழந்தைகள் வரை அது தொடர வேண்டும். அவர் நீண்ட காலம் இருக்க வேண்டும் .இப்படித்தான் நான் சினிமா உலகில் அன்பை சம்பாதித்து இருக்கிறேன். அதற்கு ஏற்ப என்னுடைய மகள் திருமணத்திற்கும் நிறைய பேர் வந்து என்னுடைய மகளை வாழ்த்தினார்கள்.
நடிகர் பிரபு திருமணம் நடந்த தஞ்சாவூருக்கு நேரடியாக வந்து விட்டார். அன்று அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் நான் அழைத்தேன் என்பதற்காக ஓடி வந்தார். விஜய் சேதுபதி என்னுடைய மகள் திருமண வரவேற்பிற்கு இரவு 11:30 மணி அளவில் ஈவிபியில் ஷூட்டிங்கை முடித்ததும் நேராக இங்கே வந்துவிட்டார். அவர் நினைத்திருந்தால் ஷூட்டிங் இருக்கு சார் என்னால் முடியவில்லை என சொல்லி இருக்கலாம். ஆனால் எனக்காக வந்தது பெரும் சந்தோஷமாக இருந்தது என சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.